ஓடும் பஸ்சில் டயர் வெடித்தது-டிரைவர் சாமர்த்தியத்தால் பயணிகள் தப்பினர்
ஓடும் பஸ்சில் டயர் வெடித்தது.டிரைவர் சாமர்த்தியத்தால் பயணிகள் தப்பினர்.;
தலைவாசல்:
ஆத்தூரில் இருந்து நேற்று மதியம் தலைவாசல் நோக்கி டவுன் பஸ் ஒன்று வந்தது. சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மணிவிழுந்தான் தனியார் நூற்பாலை அருகில் வந்த போது திடீரென பஸ்சின் முன்பக்க டயர் வெடித்தது. இதனால் பஸ் நிலைதடுமாறியது. பஸ்சில் இருந்த பயணிகள் அச்சம் அடைந்து அலறினர். பஸ்சை, டிரைவர் சாமர்த்தியமாக சிறிது தூரம் ஓட்டி நிறுத்தினார். இதனால் பயணிகள் காயமின்றி தப்பினர். அதன்பிறகு பயணிகள் வேறு பஸ்சில் தலைவாசலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.