புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் நிற்க தகரத்தால் ஆன ஷெட் அமைப்பு

வேலூர் புதிய பஸ்நிலையத்தில் பயணிகள் நிற்க தகரத்தால் ஆன ஷெட் அமைக்கப்பட்டுள்ளது.

Update: 2022-09-19 17:20 GMT

வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து சென்னை, சித்தூர், திருப்பதி, பெங்களூரு, திருவண்ணாமலை மற்றும் தென் மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது பஸ் நிலையம் முழுமையாக பயன்பாட்டுக்கு வந்ததால் மக்கள் கூட்டத்துடன் எப்போதும் பரபரப்பாக காணப்படுகிறது.

இந்தநிலையில் காட்பாடியில் இருந்து பாகாயம் செல்லும் பஸ்கள் புதிய பஸ் நிலையத்தின் உள்ளே வந்து நின்று செல்ல வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்தனர். அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி பஸ் நிலையத்திற்குள் உள்ளே வரும் பகுதியில் அதற்காக தகரத்தால் ஆன ஷெட் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு பாகாயம் செல்லும் பயணிகளும், காட்பாடி செல்லும் பயணிகளும் நிற்கின்றனர்.

காட்பாடி, பாகாயத்துக்கு செல்லும் பஸ்கள் அங்கு வந்து நின்று பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்கிறது. அந்த இடத்தில் பயணிகள் அமர இருக்கை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்