தென்னை நார் தொழிற்சாலையில் பயங்கர தீ

தென்னை நார் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.;

Update: 2023-01-18 19:14 GMT

வத்திராயிருப்பு, 

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே கோபாலபுரத்தில் இருந்து வத்திராயிருப்பு செல்லும் சாலையில் பார்வதி ஓடை தென்னை நாரிலிருந்து கயிறு தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இதனால் தொழிற்சாலையில் குவித்து வைக்கப்பட்டிருந்த தென்னை நார் கழிவுகளில் தீபரவியது. அந்த தொழிற்சாலையில் 10-க்கும் மேற்பட்ட வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் தங்களது குடும்பத்துடன் தங்கி பணியாற்றி வருகின்றனர். தீவிபத்து நடந்த போது அங்கிந்த வடமாநில ெதாழிலாளர்கள் உடனடியாக வெளியேறினர். இதனால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வத்திராயிருப்பு தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த சம்பவம் குறித்து வத்திராயிருப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்