ஒரகடம் அருகே தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

ஒரகடம் அருகே தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2023-09-22 21:47 GMT

ஒரகடம்,

காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த வடக்குப்பட்டு பகுதியில் கார் உள்ளிட்ட பல்வேறு எந்திரங்களுக்கு பயன்படுத்தப்படும் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

நேற்று திடீரென தொழிற்சாலையின் ஒரு பகுதியில் தீப்பிடித்து எரிய தொடங்கியது. சிறிது நேரத்தில் தீ மளமளவென தொழிற்சாலை முழுவதும் பரவியது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் அலறியடித்து கொண்டு வெளியே ஓடி வந்தனர். பல அடி உயரத்துக்கு கரும்புகை மூட்டம் எழுந்தது. உடனடியாக அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

1½ மணிநேரம் போராட்டம்

இதுபற்றி தகவல் அறிந்துவந்த ஸ்ரீபெரும்புதூர் தீயணைப்பு வீரா்கள் மற்றும் ஒரகடம் தொழிற்பேட்டை அருகே உள்ள தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தொழிற்சாலையில் எரிந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 1½ மணி நேர போராட்டத்துக்கு பிறகு தொழிற்சாலையில் எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் முற்றிலுமாக அணைத்தனர்.

தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணம் குறித்து ஒரகடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும் பாய்லர் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டதா? என விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்