கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2023-01-06 20:02 GMT

நெல்லை அருகே தச்சநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காசிபாண்டியன் மற்றும் போலீசார் தச்சநல்லூர் மதுரை ரோட்டில் ஒரு பள்ளிக்கூடம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும் படியாக நின்று கொண்டு இருந்த நபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் தச்சநல்லூர் மேலக்கரை நடுத்தெருவை சேர்ந்த பாரத் என்ற காத்திக்ராஜா (வயது 20) என்பதும், அவர் விற்பனைக்காக கஞ்சா வைத்து இருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை செய்து கைது செய்து, 70 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்