அரசு பஸ் மீது கல் வீசி தாக்கிய வாலிபர் பிடிபட்டார்

Update: 2023-08-18 18:45 GMT

அரூர்

தர்மபுரி மாவட்டம் அரூரில் இருந்து திருவண்ணாமலை சாலையில் பையர் நாயக்கன்பட்டி அருகே அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையோரம் நின்று கொண்டிருந்த ஒரு வாலிபர் பஸ்சின் கண்ணாடி மீது கல் வீசி தாக்கினார். இதனால் பஸ்சின் கண்ணாடியில் உடைந்தது. இது பற்றி பஸ் டிரைவர் சேட்டு மற்றும் கண்டக்டர் ஆகியோர் கல் வீசிய வாலிபரிடம் கேட்டனர். அப்போது அவர் அந்த பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (வயது25) என்பது தெரியவந்தது. எங்கள் பகுதியில் சுடுகாட்டுக்கு செல்ல சாலை வசதி இல்லை. இதனால் இந்த சாலையில் எதற்கு பஸ் சென்று வர வேண்டும் என்று கூறி அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதுதொடர்பாக கோட்டப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் மீது கல் வீசி தாக்கிய சுரேசை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்