காதலித்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்த வாலிபர் கைது
காதலித்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.;
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே தா.பழூர் கீழசிந்தாமணி பகுதியில் உள்ள காலனி தெருவை சேர்ந்தவர் கார்த்திக்(வயது 25). இவரும், தஞ்சை மாவட்டம், நெடுங்கொள்ளை பகுதியை சேர்ந்த 26 வயது பெண்ணும், கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதையடுத்து உடையார்பாளையத்தில் உள்ள தனது நண்பர் வீட்டில் அந்த பெண்ணை தங்க வைத்த கார்த்திக், அவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி உல்லாசமாக இருந்துள்ளார். அதன்பின்னர் அவரை திருமணம் செய்ய மறுத்துள்ளார். இது குறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அந்த பெண் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுமதி வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.