உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்த வாலிபர் சாவு

திருவெண்ணெய்நல்லூர் அருகே உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்த வாலிபர் சாவு

Update: 2022-09-30 18:45 GMT

திருவெண்ணெய்நல்லூர்

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள பொய்கை அரசூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னையன் மகன் காந்திராஜ்(வயது 38). தொழிலாளியான இவர் சம்பவத்தன்று தனது இருசக்கர வாகனத்தில் இருந்த பெட்ரோலை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளித்தார். இதில் தீ வெப்பம் தாங்க முடியாமல் அவர் கூச்சலிட்டார். இந்த சத்தம் கேட்டு ஓடி வந்த அவரது உறவினர்கள் காந்திராஜின் உடலில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி காந்திராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இவர் தீராத வயிற்று வலி மற்றும் தலைவலியால் வேலைக்கு செல்ல முடியாத ஏக்கத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து காந்திராஜ் மனைவி சுகன்யா கொடுத்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்