பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு வலைவீச்சு

செய்யாறு அருகே பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2023-03-15 12:02 GMT

செய்யாறு

செய்யாறு அருகே பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

வெம்பாக்கம் தாலுகா உமையாள்புரம் கிராமத்தைச் சேர்ந்த முருகன் மகன் இளங்கோ (வயது 21). இவர் 10-ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவியை கடந்த 3 ஆண்டுகளாக பகுதியை காதலித்து வந்தாராம். இந்நிலையில் ஆசை வார்த்தைகள் கூறி தனது வீட்டுக்கு அழைத்துச் சென்ற இளங்கோ தனிமையில் இருக்கும்போது உல்லாசமாக இருந்துள்ளார்.

மாணவிக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே அவரை பெற்றோர் செய்யாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து பரிசோதனை செய்தபோது கர்ப்பமாகி உள்ளது தெரிய வந்தது. அதிர்ச்சி அடைந்த பெற்றோர மாணவியிடம் விசாரித்த போது இளங்கோ என்பவர் காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கட்டாயப்படுத்தி உல்லாசமாக இருந்ததாக தெரிவித்தார்.

இதுகுறித்து புகாரின்பேரில் செய்யாறு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான இளங்கோவை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்