மாடு வியாபார தகராறில் வாலிபருக்கு கத்தி வெட்டு
ஆம்பூரில் மாடு வியாபார தகராறில் வாலிபருக்கு கத்தி வெட்டு விழுந்தது.;
ஆம்பூர் மோட்டுகொல்லை பகுதியைச் சேர்ந்தவர் உக்பாசமித் (வயது 19). மாடு வியாபாரம் செய்து வருகிறார். இவர் ஆம்பூர் மோட்டுகொல்லை தனியார் பள்ளி அருகே நடந்த மாட்டு சந்தையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அங்கு மோட்டுகொல்லை ஜலால் ரோட்டில் மாட்டு இறைச்சி கடை நடத்தி வரும் சாதிக் பாஷா (24) என்பவர் வந்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வியாபாரம் சம்பந்தமாக தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த சாதிக் பாஷா, உக்பாசமித்தின் முகத்தில் கத்தியால் வெட்டியதாக கூறப்படுகிறது. காயம் அடைந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அவரது தந்தை ரபீக் அகமத் அளித்த புகாரின் பேரில் ஆம்பூர் டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து சாதிக் பாஷாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.