சோழவரம் அருகே வாலிபர் வெட்டிக்கொலை

சோழவரம் அருகே வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.;

Update: 2023-10-11 07:55 GMT

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சோழவரம் அருகே காரனோடை கிராமத்தில் உள்ள லட்சுமி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சரத்பாபு (வயது 25). நேற்று முன்தினம் நள்ளிரவில் வீட்டிற்கு காரனோடை பஜாரில் இருந்து நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத 4 பேர் கொண்ட கும்பல் 2 மோட்டார் சைக்கிளில் வந்து சரத்பாபுவை வழி மறித்தனர்.

பின்னர் இவர் தன்னை தாக்குவதற்காக வந்துள்ளதை அறிந்து தப்பி ஓட முயன்றார். மர்ம கும்பல் சரத்பாபுவை தலை மற்றும் உடல் பகுதிகளில் சரமாரியாக வெட்டியதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

தகவல் அறிந்த சோழவரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சரத்பாபுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அவரது தந்தை ரவி சோழவரம் போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கொலைக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்