வாலிபரை காட்டு யானைகள் துரத்தியதால் பரபரப்பு

பந்தலூர் அருகே வாலிபரை காட்டு யானைகள் துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2023-10-01 22:15 GMT


பந்தலூர் தாலுகா சேரங்கோடு, பாலவாடி லைன்ஸ், காவயல், மழவன் சேரம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து வருகின்றன. அவை பொதுமக்கள், தோட்ட தொழிலாளர்களை துரத்தி வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் படச்சேரி பகுதியில் கார்த்திக் (வயது 32) என்பவர் தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஊருக்குள் 3 காட்டு யானைகள் அவரை திடீரென துரத்தியது. இதனால் அவர் அச்சத்தில் ஓட்டம் பிடித்தார். பின்னர் பொதுமக்கள் கூச்சலிட்டு யானைகளை விரட்டினர். இதனால் கார்த்திக் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அப்பகுதியில் உள்ள விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தின. தொடர்ந்து பொதுமக்களின் குடியிருப்புகளை முற்றுகையிட்டது. இதனால் ஆதிவாசி மக்கள் பீதி அடைந்தனர். எனவே, காட்டு யானைகளை வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்