புகையிலை பாக்கெட்டுகளை கடத்தி வந்த வாலிபர் கைது

மயிலாடுதுறையில் புகையிலை பாக்கெட்டுகளை கடத்தி வந்த வாலிபர் கைது மோட்டார் சைக்கிள் பறிமுதல்;

Update: 2023-02-18 18:45 GMT

மயிலாடுதுறை கால்டெக்ஸ் பகுதியில் வள்ளலார் கோவில் முன்பு மயிலாடுதுறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சாக்கு மூட்டையுடன் வந்த ஒருவரை நிறுத்திய போலீசார் அவரை சோதனையிட்டனர். சோதனையில் அவரிடம் அரசால் தடை செய்யப்பட்ட போதை கலந்த புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. விசாரணையில் மோட்டார் சைக்கிளில் வந்தவர், குத்தாலம் ராஜகோபாலபுரம் மந்தக்கரை தெருவை சேர்ந்த மோகனசுந்தரம் மகன் பிரசாந்த் (வயது26) என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரிடம் இருந்த 500 போதை கலந்த புகையிலை பாக்கெட்டுகளையும், மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்த போலீசார் பிரசாந்தை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்