கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வாலிபர் கைது
கீழ்பென்னாத்தூர் அருகே கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கீழ்பென்னாத்தூர்
கீழ்பென்னாத்தூர் அருகே சோமாசிபாடியை சேர்ந்த ஏழுமலை என்பவரின் மகன் சிவசங்கர் (வயது 26).
இவர் நேற்று சோமாசிபாடி முருகன் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார்.
கோவில்மேடு பகுதியில் சென்றபோது சோ.புதூர் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாதுரை மகன் விஜய் என்ற ஓட்டை விஜய் (29) என்பவர் சிவசங்கரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரது சட்டை பாக்கெட்டில் இருந்து ஆயிரம் ரூபாயை பறித்துக் கொண்டு ஓடி விட்டார்.
இதுகுறித்து கீழ்பென்னாத்தூர் போலீசில் சிவசங்கர் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விஜயை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.