மரம் முறிந்து விழுந்து வாலிபர் சாவு

மரம் முறிந்து விழுந்து வாலிபர் சாவு

Update: 2022-09-26 20:08 GMT

பேரையூர்

மதுரை மாவட்டம் பேரையூர், டி.கல்லுப்பட்டி பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு இடி, மின்னலுடன் மழை பெய்தது. பேரையூரில் 14 மி.மீ.மழை பெய்தது. டி.கல்லுப்பட்டி அருகே உள்ள எம்.சுப்புலாபுரம் நரசிங்காபுரத்தை சேர்ந்த முருகன் மகன் பிரசாந்த் (வயது 24). இவர் தனது வீட்டுக்கு தேவையான பலசரக்கு சாமான்களை வாங்கிவிட்டு திரும்ப வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிந்தார். அப்போது பலத்த காற்றினால் அங்கிருந்த மரத்தின் பெரிய கிளை உடைந்து பிரசாந்த் மீது விழுந்தது. இதில் பிரசாந்துக்கு தலையில் காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர், பிரசாந்த் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினார். இதுகுறித்து டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்