மது போதையில் விஷம் குடித்த வாலிபர் சாவு
வாணாபுரம் அருகே மது போதையில் விஷம் குடித்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
வாணாபுரம்
வாணாபுரம் அடுத்த ஓடியந்தல் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் செல்வம்(வயது 33). தொழிலாளியான இவர் சம்பவத்தன்று மது போதையில் வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்து விட்டதாக அவரது மனைவி கவுசல்யாவிடம் தெரிவித்தார். இதையடுத்து அவரை அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக வாணாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் செல்வம் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் பகண்டை கூட்டுரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.