விபத்தில் வாலிபர் பலி

நெல்லை அருகே விபத்தில் வாலிபர் பலியானார்.

Update: 2023-06-23 19:32 GMT

நெல்லை மாவட்டம் சம்பன்குளத்தை சேர்ந்தவர் பாலு மகன் வேல்முருகன் (வயது 25). தனியார் நிறுவன ஊழியர். இவரும் உக்கிரன்கோட்டையை சேர்ந்த கிருஷ்ணன் (23) என்பவரும் கடந்த 21-ந்தேதி மோட்டார் சைக்கிளில் நெல்லை அருகே தென்கலம் பகுதியில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற லாரியை முந்தி செல்ல முயன்ற போது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டு லாரி சக்கரத்தில் சிக்கி வேல்முருகன் உயிர் இழந்தார். கிருஷ்ணனுக்கு காயம் ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த தாழையூத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று காயம் அடைந்த கிருஷ்ணனை மீட்டு பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து தாழையூத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்