விபத்தில் வாலிபர் பலி

விபத்தில் வாலிபர் பலி;

Update: 2023-05-16 21:04 GMT

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் இருந்து தக்கலை நோக்கி ஒரு வாலிபர் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அவர் பார்வதிபுரம் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது எதிரே பார்சல்கள் ஏற்றி வந்த லாரி ஒன்று எதிர்பாராத விதமாக மோதியதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து நாகர்கோவில் போக்குவரத்து புலனாய்வுப்பிரிவு போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பிணவறைக்கு அனுப்பி வைத்தனர். முதலில் பலியானவர் யார்? என்ற விவரம் தெரியாமல் இருந்தது. இதைதொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் விபத்தில் சிக்கி பலியானவர் கருங்கல் மங்கலங்குன்று பகுதியை சேர்ந்த பிரதீஷ் (வயது 18) என்பதும், தொழிலாளியான இவர் நாகர்கோவில் வந்து விட்டு மீண்டும் வீட்டுக்கு சென்றபோது விபத்தில் சிக்கி இறந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்