விபத்தில் வாலிபர் பலி

சிவகாசியில் விபத்தில் வாலிபர் பலியானார்.;

Update: 2022-08-30 21:38 GMT

சிவகாசி, 

சிவகாசி தாலுகாவில் உள்ள மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் முத்துப்பாண்டி (வயது 40). இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் சிவகாசி-வெம்பக்கோட்டை ரோட்டில் வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அப்போது பணியில் இருந்த டாக்டர், பரிசோதனை செய்த போது முத்துப்பாண்டி இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து முத்துப்பாண்டியின் மனைவி முத்துமாரி கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Tags:    

மேலும் செய்திகள்