விபத்தில் வாலிபர் பலி

விபத்தில் வாலிபர் பலி;

Update: 2022-08-16 18:29 GMT

முதுகுளத்தூர்

முதுகுளத்தூர் அருகே உள்ள கீழக்கன்னிசேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகவேல். இவரது மகன் மதிவாணன்(வயது 27). இவர் கீழக்கன்னிசேரி கிராமத்திலிருந்து முதுகுளத்தூருக்கு சென்று பொருட்கள் வாங்கிவிட்டு இருசக்கர வாகனத்தில் திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது முதுகுளத்தூர் போலீஸ் குடியிருப்பு அருகில் வந்தபோது அந்த வழியாக வந்த ஆட்டோ மீது எதிர்பாராதவிதமாக மோதியதில் மதியழகன் பலத்த காயமடைந்தார். இவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு முதுகுளத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து முதுகுளத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்