தூத்துக்குடி அருகே விபத்தில் வாலிபர் பலி

தூத்துக்குடி அருகே விபத்தில் வாலிபர் பலியானார்.

Update: 2023-07-10 18:45 GMT

ஸ்பிக்நகர்:

முத்தையாபுரம் தங்கம்மாள்புரம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த தங்கவேல் மகன் சின்னத்துரை (வயது 23). வெல்டராக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று மாலையில் நண்பரான அதே பகுதியைச் சேர்ந்த சேர்மத்துரை மகன் சுயம்புலிங்கம் (18) என்பவருடன் தூத்துக்குடியில் இருந்து எம்.தங்கமாள்புரத்திற்கு மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தனர். தூத்துக்குடி- திருச்செந்தூர் ரோடு உப்பாற்று ஓடை பாலத்தை கடந்து வந்த போது முன்னால் சென்ற கன்டெய்னர் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சின்னத்துரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சுயம்புலிங்கம் பலத்த காயமடைந்தார். அவர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்ைச பெற்று வருகிறார். இதுகுறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்