பாலத்தின் தடுப்பு சுவர் மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி

பாலத்தின் தடுப்பு சுவர் மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலியானார்.;

Update: 2022-12-25 19:30 GMT

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, சிறுநிலா கிழக்கு தெருவை சேர்ந்தவர் முகமது அலி(வயது 35). இவருக்கு சரிதாபேகம் என்ற மனைவியும், முகமது நவ்பால் என்ற மகனும், ஜாபியா என்ற மகளும் உள்ளனர். முகமதுஅலி நேற்று காலை தனது மனைவியின் சொந்த ஊரான அரியலூர் மாவட்டம், வெள்ளனூர் கிராமத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எறையூர்-பெருமத்தூர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக முகமதுஅலி நிலை தடுமாறியதில் மோட்டார் சைக்கிள் சாலையோரத்தில் இருந்த பாலத்தின் தடுப்புச்சுவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த முகமதுஅலி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்