கிணற்றில் தவறி விழுந்து வாலிபர் பலி
சுரண்டை அருகே கிணற்றில் தவறி விழுந்து வாலிபர் பலியானார்.
சுரண்டை:
சுரண்டை அருகே இரட்டைகுளம் புலியடி மாடசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் மகேந்திரன் (வயது 17). இவர் 8-ம் வகுப்பு வரை படித்துவிட்டு கூலி வேலை செய்து வந்தார். வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் தூண்டில் மூலம் மீன்பிடித்துக் கொண்டு இருந்தார். அப்போது, அவர் திடீரென்று தவறி கிணற்றில் விழுந்து மூழ்கி பலியானார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சுரண்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சொரிமுத்து தலைமையில் போலீசார் விரைந்து சென்று மகேந்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இன்ஸ்பெக்டர் சுதந்திர தேவி விசாரணை நடத்தி வருகிறார்.