செஞ்சி அருகே பாலத்தில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சாவு

செஞ்சி அருகே பாலத்தில் இருந்து தவறி விழுந்த வாலிபர் இறந்தார்.

Update: 2023-10-11 18:45 GMT

செஞ்சி, 

செஞ்சியை அடுத்த செவலபுரை பகுதியை சேர்ந்தவர் முனியப்பன். இவரது மகன் பெருமாள் (வயது 30). திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் இவர் சிங்கவரத்தில் உள்ள ஒரு பாலத்தின் மீது அமர்ந்து பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக பாலத்தில் இருந்து தவறி கிழே விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பெருமாள் அண்ணன் செல்வகுமார் கொடுத்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்