காட்டாங்கொளத்தூர் அருகே கிணற்றில் மூழ்கி வாலிபர் சாவு

காட்டாங்கொளத்தூர் அருகே கிணற்றில் மூழ்கி வாலிபர் பலியானார்.;

Update: 2023-05-27 08:58 GMT

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் அருகே உள்ள நின்னைக்கரை 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் பாலாஜி (வயது 30), வெல்டராக வேலை செய்து வந்தார். பாலாஜி நேற்று மதியம் தனது நண்பர்களுடன் நின்னக்கரை கிராமத்தில் உள்ள கிணற்றில் குளிக்கும் போது நீச்சல் தெரியாத காரணத்தால் கிணற்றில் மூழ்கி மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து சக நண்பர்கள் உடனடியாக மறைமலைநகர் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் மூழ்கி இறந்து போன பாலாஜியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்