ரெயிலில் அடிபட்டு வாலிபர் சாவு
ரெயிலில் அடிபட்டு வாலிபர் சாவு இறந்தார்.;
ராமேசுவரம்,
ராமநாதபுரத்திற்கும் உச்சிப்புளிக்கும் இடைப்பட்ட ரெயில்வே தண்டவாளம் அருகே சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் நேற்று ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். இது குறித்து அறிந்த ராமேசுவரம் ரெயில்வே போலீசார் அங்கு சென்று வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தண்டவாளத்தை கடக்கும்போது ரெயில் மோதி இறந்தாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.