மரம் விழுந்து வாலிபர் பலி
செங்கோட்டை அருகே நெய் அருவிக்கு நண்பர்களுடன் குளிக்கச் சென்ற வாலிபர் மீது மரம் விழுந்து பலியானார்.
செங்கோட்டை அருகே நெய் அருவிக்கு நண்பர்களுடன் குளிக்கச் சென்ற வாலிபர் மீது மரம் விழுந்து பலியானார்.
வாலிபர்
தென்காசி மாவட்டம் செங்கோட்டை மேலூர் பம்ப் ஹவுஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் நவாஸ். இவரது மகன் முகமது தமீன் (வயது 23). இவர் பிளஸ்-2 படித்து முடித்துவிட்டு வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்வதற்காக முயற்சி செய்து வந்தார்.
இந்தநிலையில் அவர் நேற்று மாலை செங்கோட்டை அருகே உள்ள கண்ணுபுளி மெட்டு பகுதிக்கு மேல் தடை செய்யப்ட்ட பகுதியில் அமைந்துள்ள நெய் அருவிக்கு நண்பர்களுடன் குளிக்க சென்றார். அப்போது அவர் குளிக்காமல் அந்தப் பகுதியில் வேடிக்கை பார்த்தவாறு அருவிக்கரை அருகில் நின்று கொண்டிருந்தார்.
மரம் விழுந்து சாவு
அந்த நேரத்தில் காற்று வேகமாக அடித்ததால் அங்கு இருந்த வாகை மரம் சரிந்துள்ளது. அதனை கண்டதும் முகமது தமீன் அங்கிருந்து எழுந்து ஓட முயற்சித்தார். அதற்குள் அந்த மரம் அவர் மேலே விழுந்தது. இதில் அவரது முதுகெலும்பு உடைந்து சம்பவ இடத்திலேயே முகமமது தமீன் பரிதாபமாக இறந்தார்.
தகவல் அறிந்ததும் செங்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். மரம் அறுக்கும் எந்திரத்தை வைத்து மரத்தை அறுத்து அகற்றினர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து செங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.