நாகர்கோவில்: வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் தற்கொலை..!
நாகர்கோவில் அருகே வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;
நாகர்கோவில்:
நாகர்கோவில் அறுகுவிளையை சேர்ந்தவர் அபி கிறிஸ்டின் (வயது 23), பாலிடெக்னிக் படித்துள்ளார். இவர் பல்வேறு நிறுவனங்களில் வேலைக்காக முயற்சித்துள்ளார். ஆனால் கிடைக்கவில்லை. இதனால் அபி கிறிஸ்டின் மனவேதனையில் காணப்பட்டார்.
இந்த நிலையில் அபி கிறிஸ்டின் படுக்கை அறையில் உள்ள மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனே வடசேரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்கள்