நாய் குறுக்கே வந்ததால் விபத்து; மோட்டார் சைக்கிளில் சென்ற ஆசிரியர் பலி

போடி அருகே நாய் குறுக்கே வந்ததால் ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து ஆசிரியர் பலியானார்.

Update: 2023-04-04 20:45 GMT

போடி அருகே உள்ள தர்மத்துபட்டியை சேர்ந்தவர் ராமர் (வயது 79). ஓய்வுபெற்ற ஆசிரியரான இவர், நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் போடிக்கு வந்தார். பின்னர் அங்கிருந்து தர்மத்துபட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். தர்மத்துபட்டி அருகே அவர் வந்தபோது, சாலையின் குறுக்கே நாய் ஒன்று வந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக நாய் மீது மோட்டார் சைக்கிள் மோதியது.

இதில் ராமர் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக போடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ராமர் நேற்று இறந்தார். இதுகுறித்து போடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்