வேலை கிடைக்காத விரக்தியில் ஆசிரியர் தற்கொலை

கோவை அருகே வேலை கிடைக்காத விரக்தியில் ஆசிரியர் தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2023-08-27 22:45 GMT


கோவை


கோவை அருகே வேலை கிடைக்காத விரக்தியில் ஆசிரியர் தற்கொலை செய்துகொண்டார்.


இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-


ஆசிரியர் தற்கொலை


கோவையை அடுத்த நீலாம்பூர் அருகே உள்ள மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் தினேஷ்பாபு (வயது 40). இவரது மனைவி அனிதா (37). தனியார் நிறுவன ஊழியர். இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். தினேஷ்பாபு கடந்த 10 ஆண்டுகளாக நீலாம்பூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். இவர் கொரோனா காலக் கட்டத்தில் வேலையை விட்டு நின்றுவிட்டார்.


இதையடுத்து கொரோனாவுக்கு பிறகு இருந்து பல்வேறு பள்ளிகளில் ஆசிரியர் பணிக்கு வேலை தேடி அலைந்தார். ஆனால் கடந்த 4 ஆண்டுகளாக எந்த வேலையும் கிடைக்காமல் வீட்டிலேயே இருந்து வந்தார். சம்பவத்தன்று ஒரு பள்ளிக்கு வேலை கேட்டு சென்றதாக தெரிகிறது. ஆனால் அங்கு அவருக்கு வேலை கிடைக்கவில்லை. வேலை கிடைக்காத விரக்தியில் தினேஷ்பாபு மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். இந்தநிலையில் கடந்த 25-ந் தேதி இரவு 10 மணியளவில் மனைவி மற்றும் குழந்தைகளை தூங்கவைத்து விட்டு வேலை கிடைக்காத விரக்தியில் தினேஷ்பாபு தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.


போலீசார் விசாரணை


இதுகுறித்து சூலூர் இன்ஸ்பெக்டர் மாதையன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


வேலை கிடைக்காத விரக்தியில் ஆசிரியர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Tags:    

மேலும் செய்திகள்