சாலை நடுவே கவிழ்ந்த டேங்கர் லாரி

சாலை நடுவே டேங்கர் லாரி கவிழ்ந்தது.;

Update: 2023-01-17 20:23 GMT

தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் இருந்து கர்நாடக பதிவு எண் கொண்ட டேங்கர் லாரி 40 டன் சிமெண்டு கலவையை ஏற்றிக்கொண்டு தூத்துக்குடி துறைமுகத்திற்கு திருச்சி வழியாக சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை டிரைவர் சதீஷ் ஓட்டினார். திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பஞ்சப்பூர் பகுதியில் உள்ள வாகன சோதனைச்சாவடி அருகே வந்தபோது அங்கு வைக்கப்பட்டிருந்த தடுப்புகள் மீது மோதியதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையின் நடுவே கவிழ்ந்தது.

இதனை பார்த்த பின்னால் வந்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த விபத்தில் காயமடைந்த லாரி டிரைவர் சதீசை அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். இது பற்றி தகவல் அறிந்த தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

இந்த விபத்தால் அந்த பகுதியில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து அருகில் உள்ள அணுகு சாலையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. இதனால் போக்குவரத்து சீரானது. மேலும் இந்த விபத்து குறித்து தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்