மின்சார வயர்கள் உரசியதில் தீப்பிடித்த கரும்பு தோட்டம்

சத்திரப்பட்டி அருகே மின்சார வயர்கள் உரசியதில் கரும்பு தோட்டம் தீப்பிடித்தது.;

Update: 2023-02-07 19:00 GMT

சத்திரப்பட்டி அருகே உள்ள விருப்பாட்சி பெருமாள்குளம் பகுதியை சேர்ந்தவர் ரவி பாரதி (வயது 58). விவசாயி. இவர், சுமார் 5 ஏக்கர் நிலத்தில் கரும்பு பயிரிட்டு இருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை அந்த பகுதியில் பலத்த காற்று வீசியது. அப்போது நிலத்தின் மேற்பகுதியில் சென்ற 2 மின்சார வயர்கள் ஒன்றுடன் ஒன்று உரசியதாக கூறப்படுகிறது.

இதில் ஏற்பட்ட தீப்பொறிகள் கரும்புத் தோட்டத்தில் விழுந்தது. சிறிதுநேரத்தில் கரும்பு தோகை தீப்பற்றி எரிய தொடங்கியது. அந்த தீ மளமளவென பரவியது. இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சுமார் ½ மணி நேரம் போராடி கரும்பு தோட்டத்தில் எரிந்த தீயை தண்ணீர் ஊற்றி ரவிபாரதி அணைத்தார். இந்த தீ விபத்தில் கரும்புகள் கருகி சேதமடைந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த ஒட்டன்சத்திரம் தாசில்தார் முத்துச்சாமி தலைமையிலான வருவாய்த்துறையினர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்