கிராம மக்கள் திடீர் மறியல்

ஊரகவேலை திட்டத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறி சாலை மறியலில் ஈடுபட்ட ஊராட்சி தலைவர் உள்பட 50 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

Update: 2023-08-13 18:45 GMT

திண்டிவனம்

திண்டிவனம் அருகே நொளம்பூர் கிராமத்தில் உள்ள குளத்தை தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் சீரமைக்கும் பணி நடைபெற்ற வருகிறது. இதில் பணி பொறுப்பில் உள்ளவர் முறைகேட்டில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. இதை கண்டித்து ஊராட்சி மன்ற தலைவர் லதா தலைமையில் பெண்கள் உள்பட 50 பேர் ஆவணிப்பூர் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதுபற்றிய தகவல் அறிந்து வந்த ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட ஊராட்சி மன்ற தலைவர் லதா, ராமசந்திரன் உள்பட 50 பேர் மீது ஒலக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்