சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம் சீரமைப்பு

சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம் சீரமைக்கப்பட்டது.;

Update: 2022-07-25 20:19 GMT

திருச்சி காஜாமலை பகுதியில் இருந்து கலெக்டர் பங்களா வழியாக மன்னார்புரம் நோக்கி செல்லும் சாலையில் இடதுபுறம் காஜாமலை பஸ் நிறுத்தம் அருகே நேற்று முன்தினம் மாலை திடீரென பயங்கர சத்தத்துடன் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டது. இதில் இருந்து வெளியேறிய சாக்கடைநீர் அந்த சாலை முழுவதும் ஓடியது. இதை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பாதாள சாக்கடைக்காக பொருத்தப்பட்டு இருந்த ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டதாலேயே மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டது தெரியவந்தது. தகவல் அறிந்த கலெக்டர் பிரதீப் குமார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து வந்து சீரமைப்பு பணியை தொடங்கி வைத்தனர். நேற்று காலை கிரேன் உதவியுடன் உடைப்பு ஏற்பட்ட ராட்சத குழாய் அப்புறப்படுத்தப்பட்டு மாற்று குழாய்கள் பொருத்தப்பட்டது. மாநகராட்சி பொறியாளர்கள் சீரைமப்பு பணிகளை பார்வையிட்டு ஊழியர்களுக்கு அறிவுறுத்தினார்கள். இதற்கிடையே இந்த பணியால் அந்த சாலையில் போக்குவரத்து நெரில் ஏற்படாமல் இருக்க இருபுறமும் இரும்பு தடுப்புகளை வைத்து வாகனங்களை மாற்றுவழியில் அனுமதித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்