ஆரல்வாய்மொழி அருகே ஓடும் பஸ்சில் திடீர் தீ
ஆரல்வாய்மொழி அருகே ஓடும் பஸ்சில் திடீர் தீ விபத்து ஏற்ப்பட்டது.;
ஆரல்வாய்மொழி :
நாகர்கோவிலில் இருந்து குமுளிக்கு தினமும் காலையிலும், மாலையிலும் அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று மாலை 6 மணிக்கு குமுளிக்கு பஸ் புறப்பட்டு சென்றது. அதில் சுமார் 40 பயணிகள் பயணம் செய்தனர்.
இந்த பஸ் தோவாளை புதூர் அருகே வந்த போது டிரைவர் அருகில் இருந்த என்ஜின் பகுதியில் திடீரென தீப்பிடித்தது. இதனை கவனித்த டிரைவர் உடனடியாக பஸ்சை நிறுத்தினார். அதே சமயத்தில் தீ மேலும் பரவுவதற்கு முன்பு டிரைவர் தண்ணீரை ஊற்றி அணைத்தார்.
இதனை கவனித்த பொதுமக்கள் பஸ்சில் இருந்து அலறியடித்தபடி ஓட்டம் பிடித்தனர். என்ஜினில் ஏற்பட்ட கோளாறு தான் தீப்பிடிக்க காரணமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அந்த பஸ்சில் பயணம் செய்தவர்கள் மாற்று பஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.