கோட்டைமேடு அரசு பள்ளி அருகே முட்புதரில் திடீர் தீ

கோட்டைமேடு அரசு பள்ளி அருகே முட்புதரில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.;

Update: 2022-07-24 18:41 GMT

குளித்தலை அருகே உள்ள கோட்டைமேடு ஆதிதிராவிடர் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளி அருகே முட்புதர்கள் மற்றும் செடி கொடிகள் முளைத்து காய்ந்த நிலையில் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று மதியம் திடீரென புதருக்குள் தீ பிடித்து கொண்டு மள மள வென எரிந்துள்ளது. இதைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் முசிறி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர் ெரங்கன் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர். இதனால் அந்த பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது. இந்த தீ விபத்து எதனால் ஏற்பட்டது என குளித்தலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்