தேசிய நெடுஞ்சாலையில் திடீர் விரிசல்விழுப்புரத்தில் பரபரப்பு

விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் திடீர் விரிசல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-02-07 18:45 GMT


விழுப்புரம்- நாகப்பட்டினம் இடையே தற்போது 4 வழிச்சாலை பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இதில் விழுப்புரம் ஜானகிபுரம் புறவழிச்சாலை பகுதியில் மேம்பாலம் கட்டுவதற்காக பில்லர் அமைத்து பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தை அடுத்துள்ள பாண்டியன் நகர் பகுதியில் திருச்சியில் இருந்து சென்னை செல்லும் சாலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் திடீரென தார் சாலையில் விரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக அப்பகுதியில் செல்லும் அனைத்து வாகனங்களும் சீரான வேகத்தில் ஊர்ந்து சென்றன.

இதுகுறித்த தகவலின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீசாரும், போக்குவரத்து போலீசாரும் அங்கு விரைந்து சென்று விரிசல் ஏற்பட்ட பகுதியில் வாகனங்கள் செல்லாமல் இருக்கவும், ஏதேனும் அசம்பாவிதத்தை தடுக்கும் விதமாகவும் அங்கு பேரிகார்டு அமைத்து பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வாகனங்கள் சீரான வேகத்தில் செல்ல வழிவகை செய்தனர். தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவு நேரத்தில் திடீரென விரிசல் ஏற்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்