சாலையில் திடீர் விரிசல்
சின்னக்காம்பட்டி அருகே சாலையின் நடுவே 2 இடங்களில் திடீரென விரிசல் ஏற்பட்டது.;
மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஒட்டன்சத்திரத்தில் இருந்து சின்னக்காம்பட்டி, மாம்பாறை, அய்யம்பாளையம் வழியாக மார்க்கம்பட்டி வரையிலான தார்சாலை சமீபத்தில் அகலப்படுத்தப்பட்டு சீரமைக்கப்பட்டது. இதில்சின்னக்காம்பட்டி அருகே சாலையின் நடுவே 2 இடங்களில் திடீரென விரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக இரவில் மோட்டார் சைக்கிளில் வருவோர் கீழே விழுந்து காயம் அடைந்து வருகிறார்கள். ஒட்டன்சத்திரத்தில் இருந்து மார்க்கம்பட்டி, திருப்பூர் மாவட்டம் முத்தூர், மூலனூர், தாராபுரம், கரூருக்கு இந்த சாலை வழியாகவே வாகனங்கள் சென்று வருகின்றன. முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் முன்வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.