வானூர் அருகே சோகம்:பிளஸ்-2 தேர்வில் தோல்வியடைந்த மாணவி தற்கொலைமற்றொரு மாணவி தற்கொலை முயற்சி

வானூர் அருகே பிளஸ்-2 தேர்வில் தோல்வி அடைந்த மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். மதிப்பெண் குறைந்ததால் மற்றொரு மாணவி தற்கொலைக்கு முயன்றார்.;

Update: 2023-05-08 18:45 GMT


வானூர், 

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே ஓமந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜன். விவசாயி. இவரது மகள் ரமணி (வயது19). இவர் கடந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வு எழுதினார். இதில் ஆங்கில பாடத்தில் மட்டும் தேர்ச்சி பெறவில்லை.

இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ்-2 பொதுத்தேர்வில் ஆங்கில பாடத்தை மட்டும் தனித்தேர்வராக எழுதினார். பிளஸ்-2 தேர்வு முடிவு நேற்று காலை வெளியானது. தேர்வு முடிவை அறிந்துகொள்ள ஆர்வமாக இருந்த அவர், செல்போன் மூலம் பார்த்துள்ளார். அதில் 29 மதிப்பெண்கள் எடுத்து மீண்டும் தோல்வி அடைந்தார். இதனால் ரமணி மனமுடைந்து போனார்.

தற்கொலை

பெற்றோர் வயலுக்கு சென்றிருந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்த ரமணி, மனவேதனையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த நிலையில் வெளியே சென்றிருந்த பெற்றோர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, மகள் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த கிளியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளி, சப்-இன்ஸ்பெக்டர் வேலுமணி மற்றும் போலீசார் விரைந்து வந்து, மாணவியின் உடலை கைப்பற்றினர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு உடலை அனுப்பி வைத்தனர். பிளஸ்-2 தேர்வில் மீண்டும் தோல்வி அடைந்த விரக்தியில் மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மற்றொரு சம்பவம்

இதேபோல் வானூர் அருகே சேமமங்கலம் கிராமத்தை சேர்ந்த மாணவி ஒருவர் பிளஸ்-2 ேதர்்வில் 600-க்கு 380 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றார். குறைந்த மதிப்பெண் பெற்றதால் மனமுடைந்த அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். தற்போது அவர் புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக வானூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்