கரூரில் நீட் தேர்வு எழுதிய மாணவர் திடீர் மாயம்
கரூரில் நீட் தேர்வு எழுதிய மாணவர் திடீர் மாயம் ஆனார்.;
கரூர் கருப்பகவுண்டன் புதூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் பாரதி (வயது 19). இவர் பிளஸ்-2 படித்து முடித்து விட்டு கடந்த 2 ஆண்டுகளாக நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார். இந்தநிலையில் கடந்த மாதம் நடந்த நீட் தேர்வை பாரதி எழுதி உள்ளார்.
தேர்வில் மதிப்பெண்கள் குறைவாக கிடைக்கக்கூடும் என பாரதி கவலை அடைந்துள்ளார். இந்தநிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்ற பாரதி நீண்டநேரம் ஆகியும் வீட்டிற்கு வரவில்லை.
இதையடுத்து பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் பாரதி கிடைக்கவில்லை. இதுகுறித்து பாரதியின் பெற்றோர் தாந்தோணிமலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஓம்பிரகாஷ் வழக்குப்பதிந்து மாயமான பாரதியை தேடி வருகின்றனர்.