இந்து முன்னணி சார்பில் தெருமுனை பிரசார கூட்டம்

பேரணாம்பட்டில் இந்து முன்னணி சார்பில் தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது.;

Update: 2023-07-16 17:50 GMT

பேரணாம்பட்டு பஸ் நிலையம் எதிரில் நகர இந்து முன்னணி சார்பில் கோவில்கள் பாதுகாக்கவும் மற்றும் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை மீட்டெடுத்து, தெய்வ சிலைகளை பாதுகாப்பது குறித்து கொள்கை விளக்க தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது. நகர இந்து முன்னணி தலைவர் ஹேம்பிரசாத் தலைமை தாங்கினார். பொது செயலாளர் முத்துக்குமார், நகர செயலாளர் மஞ்சுநாதன், லோகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வேலூர் கோட்ட தலைவர் மகேஷ் கலந்து கொண்டு இந்து கோவில்களை அறநிலையத்துறை ஆதிக்கம் செலுத்தி வருவதால் உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது என பேசினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் பிரபாகரன் மற்றும் பேரணாம்பட்டு நகர, ஒன்றிய இந்து முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்