மத்திய அரசுக்கு எதிராக மாநிலம் தழுவிய பிரசார பயணம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மத்திய அரசுக்கு எதிராக மாநிலம் தழுவிய பிரசார பயணம் நடைபெறுகிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மத்திய அரசுக்கு எதிராக மாநிலம் தழுவிய பிரசார பயணம் நடைபெற்று வருகிறது. இந்த பிரசாரத்தின் நிறைவாக ஜெயங்கொண்டத்தில் நாளை (வியாழக்கிழமை) தபால் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடைபெறுகிறது. இந்தநிலையில் நேற்று காலை புதுச்சாவடி கிராமத்தில் தப்பாட்ட இசைக்குழுவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பிரசாரம் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் தலைமை தாங்கினார். மீனா, பத்மாவதி, சேகர் குமார், வீரப்பன், தியாகராஜன் ஆகிய மாவட்டக்குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். பிரசார பயணம் ஆமணக்கந்தோண்டி, கடாரம்கொண்டான், உட்கோட்டை, வீரசோழபுரம், கங்கைகொண்ட சோழபுரம், இளையபெருமாநல்லூர், முத்து சேர்வாமடம், மீன்சுருட்டி, வெத்தியார் வெட்டு, சலுப்பை வழியாக ஜெயங்கொண்டத்தில் இரவு 7 மணிக்கு பிரசாரம் நிறைவடைந்தது. இதில், கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.