கிணற்றில் தவறி விழுந்த புள்ளி மான் உயிருடன் மீட்பு

கிணற்றில் தவறி விழுந்த புள்ளி மான் உயிருடன் மீட்கப்பட்டது.;

Update:2023-06-19 00:15 IST

விழுப்புரம் அருகே காணை ஒன்றியம் சங்கீதமங்கலம் கிராமத்தில் இருந்த விவசாய கிணற்றில் புள்ளிமான் ஒன்று தவறி விழுந்து தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்தது. இதைப்பார்த்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் இதுகுறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அன்னீயூர் தீயணைப்பு நிலைய அலுவலர் துருவனந்தன் தலைமையில் வீரா்கள் விரைந்து வந்து நீண்ட நேரம் போராடி மானை உயிருடன் மீட்டனர். பின்னர் அந்த மான் விழுப்புரம் வனச்சரகரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்