ஆணவப் படுகொலைகளை தடுக்க சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும்

ஆணவப் படுகொலைகளை தடுக்க சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தி உள்ளது.;

Update: 2022-10-09 18:45 GMT

ஆணவப் படுகொலைகளை தடுக்க சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தி உள்ளது.

மாநாடு

மயிலாடுதுறையில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட சிறப்பு மாநாடு நடந்தது. மாநாட்டுக்கு, மாவட்ட தலைவர் இளங்கோவன் தலைமை தாங்கினார். பழனிவேல் வரவேற்றுப் பேசினார். மாநில செயலாளர் பழ.வாஞ்சிநாதன், மாநில துணைத் தலைவர் சாமிநாதன் ஆகியோர் பேசினர்.

மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் சீனிவாசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் துரைராஜ், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் ஸ்டாலின், மாவட்ட பொருளாளர் ஏ.ஆர்.விஜய், மாவட்ட துணைத் தலைவர் டி.சிம்சன், மாவட்ட துணை செயலாளர்கள் அ.அறிவழகன், நேதாஜி, மாவட்டக்குழு உறுப்பினர் ரவீந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

சிறப்புச் சட்டம்

சாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்க சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும். மாநிலம் முழுவதும் நிகழும் தீண்டாமைக் கொடுமைகளை தடுத்திட உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். பஞ்சமி நிலங்களை மீட்டு நிலமற்ற ஆதிதிராவிட மக்களுக்கு வழங்க வேண்டும்.

ஆதிதிராவிட நலத்துறை மூலம் வழங்கப்பட்ட அனைத்து வீட்டுமனைபட்டாக்களையும் வருவாய்த்துறை கணக்கில் ஏற்றிட வேண்டும். இருளர், பழங்குடி மக்களுக்கு குடிமனைப்பட்டா, சாதிச்சான்று வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்டக்குழு உறுப்பினர் வனரோஜா நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்