மாநகராட்சி சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாம்: நாளை நடக்கிறது

மாநகராட்சி சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாம் நாளை நடக்கிறது.;

Update: 2023-04-08 18:58 GMT

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வார்டு 1 முதல் 48 வரை உள்ள பகுதிகளில் கட்டிட உரிமம் பெறுதல், புதிய சொத்துவரி, காலியிட வரி, தொழில் வரி விதிக்கவும், சொத்துவரி மற்றும் குடிநீர் கட்டணம் பெயர் மாற்றம் செய்யவும், பிறப்பு, இறப்பு சான்று பெறவும், புதிய குடிநீர் இணைப்பு பெறவும், குடிநீர் இணைப்பு மற்றும் தெரு விளக்கு சம்பந்தமான புகார்களுக்கு தீர்வு காணுதல் மற்றும் பொதுமக்களின் குறைகளை தீர்வு காணுதல் தொடர்பாக சிறப்பு முகாம் மாநகராட்சி மேயர் தலைமையிலும், மாநகராட்சி துணை மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையர் முன்னிலையிலும் நடத்தப்பட உள்ளது. இந்த சிறப்பு முகாம் கரூர் மாநகராட்சி அலுவலகத்தில் நாளை (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. பொதுமக்கள் இந்த சிறப்பு முகாமினை பயன்படுத்தி பயன்பெறலாம் மேற்கண்ட தகவலை கரூர் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்