திருவள்ளூர் மாவட்டத்தில் ரேஷன்கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல் சிறப்பு முகாம் 9-ந்தேதி நடக்கிறது
திருவள்ளூர் மாவட்டத்தில் ரேஷன்கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல் சிறப்பு முகாம் 9-ந்தேதி நடக்கிறது.;
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருவள்ளூர் மாவட்டத்தில் பிரதி மாதம் 2-வது சனிக்கிழமை ரேஷன்கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் தொடர்பான சிறப்பு முகாம் பிரதி மாதம் ஒரு கிராமம் என நடத்தப்பட்டு வருகிறது. வருகிற 9-ந்தேதி (சனிக்கிழமை) கீழ்கண்ட கிராமங்களில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த சிறப்பு முகாம் நடைபெறும் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் மின்னணு ரேஷன்கார்டில் திருத்தம் மற்றும் புகைப்படம் பதிவு செய்திட தொடர்பான விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அளித்து பயன்பெறலாம். மேற்படி அனைத்து வட்ட வழங்கல் அலுவலர்களும் ஆன்லைனில் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருவள்ளூர் வட்டம் செய்யம்பாக்கம் கிராமத்தில் உள்ள ரேஷன் கடை அருகில், ஊத்துக்கோட்டை வட்டம் பாலவாக்கம் ஜே.ஜே. நகர் (இருளர் பகுதியில்) உள்ள ரேஷன் கடை அருகில். பூந்தமல்லி வட்டம் குத்தம்பாக்கம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம். திருத்தணி வட்டம் தாடூர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம். பள்ளிப்பட்டு வட்டம் அத்திமாஞ்சேரி ரேஷன் கடை அருகில். பொன்னேரி வட்டம் வண்டி காவனூர் கிராம நிர்வாக அலுவலகம். கும்மிடிப்பூண்டி வட்டம் மாநெல்லூர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம். ஆவடி வட்டம் கொசவம்பாளையம் திருநின்றவூர் பி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம். ஆர்.கே.பேட்டை வட்டம் மகான் காளிகாபுரம் ரேஷன் கடை அருகில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. எனவே பொதுமக்கள் இதனை பயன்படுத்தி பயன் பெறுங்கள்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.