வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான சிறப்பு முகாம்

வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான சிறப்பு முகாம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

Update: 2022-09-02 18:21 GMT

இ-சான்றிதழ் வழங்கப்படும்

இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்கள் தொடர்பான விவரங்களை உறுதி செய்வதற்காகவும், ஒரே வாக்காளரின் பெயர், ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதியில் (அல்லது) ஒரே தொகுதியில், ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையில் இடம் பெற்றுள்ளதா? என்பதை கண்டறிவதற்காகவும், நாடு முழுவதும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணினை இணைக்க அனுமதி வழங்கியதன் அடிப்படையில் அப்பணி கடந்த மாதம் 1-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தின் கீழ் ஒரு பகுதியாக ஒவ்வொரு மாவட்டத்திலும் தங்களது ஆதார் எண்ணினை தாமாகவே முன் வந்து இணையவழியில் வாக்காளர் எண்ணுடன் இணைத்திடும் முதல் 1,000 வாக்காளர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் இ-சான்றிதழ் வழங்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நேஷனல் வோட்டர்ஸ் சர்வீஸ் போர்ட்டல் (https://www.nvsp.in), வோட்டர்ஸ் ஹெல்ப்லைன் ஆப் (https://play.google.com/store/apps/details?id=com.eci.citizen-amp;hl=en), வோட்டர்ஸ் போர்ட்டல் (https://voterportal.eci.gov.in) இதில் ஏதேனும் ஒரு செயலியினை பயன்படுத்தி வாக்காளர்கள் தங்களது ஆதார் எண்ணிணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்திட வேண்டும். ஆதார் எண்ணினை இணைத்த பின்பு அதற்கு வழங்கப்படும் குறியீட்டெண்ணினை தனியாக குறித்து வைத்து கொள்ள வேண்டும்.

சிறப்பு முகாம்

பின்னர் https://elections.tn.gov.in/getacertificate என்ற இணையதளத்தின் முகவரிக்கு சென்று உங்களது செல்போன் எண்ணிணையும், ஒ.டி.பி. எண்ணிணையும், ஏற்கனவே குறித்து வைத்து கொண்டுள்ள குறியீட்டெண்ணையும் உள்ளீடு செய்தால் இ-சான்றிதழ் கிடைக்கும். பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் உள்ள வாக்காளர்கள் தங்களது ஆதார் எண்ணிணை வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையுடன் மேற்குறிப்பிட்ட வழிமுறைகளை பின்பற்றி இணைத்து "இ" சான்றிதழ்களை தரவிறக்கம் செய்யலாம்.

மேலும் பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான சிறப்பு முகாம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) அன்று அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நடைபெற உள்ளது. எனவே வாக்காளர்கள் தங்களது ஆதார், வாக்காளர் அடையாள அட்டை எண் விவரங்களை படிவம்-6B-யில் சமர்ப்பித்து வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம் என்று அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்