மோட்டார் சைக்கிளில் பதுங்கி இருந்த பாம்பு பிடிபட்டது

கூடலூரில் மோட்டார் சைக்கிளில் பதுங்கி இருந்த பாம்பு பிடிபட்டது.;

Update:2023-10-20 01:00 IST

கூடலூர் செவிடிப்பேட்டை பகுதியில் நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளில் பாம்பு பதுங்கி இருப்பதை அப்பகுதி மக்கள் கண்டனர். மேலும் மோட்டார் சைக்கிளை சம்பந்தப்பட்ட உரிமையாளர் ஓட்டிச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த கூடலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் மார்ட்டீன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மோட்டார் சைக்கிளில் பதுங்கி இருந்த 4 அடி நீளமுள்ள பாம்பை பிடித்தனர். பின்னர் அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு பாம்பை தீயணைப்பு துறையினர் விட்டனர். அதன் பின்னரே பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்