தொழிலாளி வீட்டுக்குள் புகுந்த பாம்பு
கூடலூரில் தொழிலாளி வீட்டுக்குள் புகுந்த இருதலை மணியன் பாம்பை வனத்துறையினர் பிடித்தனர்.
கூடலூர் 17-வது வார்டு ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் இளையராஜா. கூலித்தொழிலாளி. நேற்று இவரது வீட்டுக்குள் இருதலை மணியன் பாம்பு ஒன்று புகுந்தது. இதை பார்த்த இளையராஜா உடனே கம்பம் வனச்சரக அலுவலகத்துக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் வனக்காப்பாளர் பாலாஜி மற்றும் ஊழியர்கள் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் அந்த பாம்பை பிடித்தனர். அதன் பின்பு கூடலூர் பெருமாள்கோவில் அருகே உள்ள வனப்பகுதியில் கொண்டு போய் அந்த பாம்பு விடப்பட்டது.