கடைக்குள் புகுந்த பாம்பு

போடி அருகே கடைக்குள் பாம்பு புகுந்தது;

Update: 2022-11-27 18:45 GMT

போடி அருகே உள்ள ரெங்கநாதபுரம் காந்தி நகர் பகுதியில் லேத்‌ ஒர்க் ஷாப் ஒன்று உள்ளது. இங்கு நேற்று மாலை பாம்பு ஒன்று புகுந்தது. இதை கண்ட ஒர்க்‌ஷாப் உரிமையாளர் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் போடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போடி தீயணைப்பு நிலைய அலுவலர் சக்திவேல் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சுமார் அரை மணி நேரம் போராடி பாம்பை பிடித்தனர். பிடிபட்டது சுமார் 6 அடி நீள நல்ல பாம்பு ஆகும். இதையடுத்து அந்த பாம்பை தீயணைப்பு வீரர்கள் வனப் பகுதியில் விட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்